|
Alaikal e-news
Nyheder på Tamil
-
தேன்கூடு திரைப்படம் பிரசாத்தில் காண்பிக்கப்பட்டது கருத்துக்கள் :
-
தொழிலாளர் சம்பள பிரச்னை குழு அமைக்க முடிவு!
சினிமா தொழிலாளர்கள் சம்பள பிரச்னை தொடர்பாக பெப்சிக்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் மோதலை தீர்க்க இயக்குநர் சங்கம் சார்பில் தனியாக ஒரு குழு அமைக்கப்படும் என்று இயக்குநர் சங்க தலைவர் பாரதிராஜா அறிவித்துள்ளார். தொழிலாளர்கள் சம்பள பிரச்னை தொடர்பாக பெப்சிக்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், 100க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. படப்பிடிப்பு ரத்தால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பெப்சி சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் இப்பிரச்னைக்கு [...]
-
இந்திப்படத்தில் பிஸியாக இருக்கிறார் பிரபுதேவா
காதலில் இருந்து தனது கவனத்தை வேறு பக்கம் திருப்பியிருக்கும் நடிகர் பிரபுதேவா, காதலர் தினத்தில் புதிய இசை ஆல்பத்தின் ஆடியோவை வெளியிட முடிவு செய்திருக்கிறாராம். நயன்தாராவுடனான காதல் முறிவு குறித்த செய்திகள் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளியாகி வந்தாலும், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஒரு இயக்குனராக, ரவுடி ரத்தோர் என்ற இந்திப்படத்தில் பிஸியாக இருக்கிறார் பிரபுதேவா. அதேநேரம் தனது நீண்ட கால கனவான இசை ஆல்பம் தயாரிக்கும் வேலைகளிலும் மும்முரம் காட்டி வருகிறாராம் மாஸ்டர். சமீபகாலங்களில் தனக்கு கிடைத்த ஓய்வு [...]
-
சீரடியில் கோத்தபயா ராஜபக்ஷே தரிசனம்
மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் கோத்தபயா ராஜபக்ஷே, சீரடி சாய்பாபாவை தரிசனம் செய்தார். கோத்தபயாவுடன், அவரது மனைவி, மகன் உடன் வந்தனர். இதன் பிறகு அவர் கூறுகையில், இங்கு வருடத்திற்கு இரண்டு முறை வருவேன். நான் சாய்பாபாவின் தீவிர பக்தன். நான் சாய்பாபாவின் வரலாற்றை தினமும் வாசிப்பேன். இலங்கையில் சீரடி சாய்பாபாவுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர். இந்தியா, இலங்கையும் சகோதர நாடுகள். இலங்கை மக்கள், இந்தியா மீது அதிக ஈர்ப்பு வைத்துள்ளனர் என கூறினார்.
-
சிரியா பிரச்னை: ஐ.நா.வுக்கு இந்தியா ஆதரவு
சிரியாவில் அதிபருக்கு எதிராக ஐ.நா. பொதுச்சபையில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா ஓட்டளிக்க உள்ளது. சிரியாவில் கடந்த 11 மாதங்களாக அதிபர் பஷீர் ஆசாத்திற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். நேற்று நடந்த வன்முறையில் 200-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இருப்பினும் அதிபர் பஷீர் ஆசாத் பதவி விலக மறுத்துவருகிறார். இது தொடர்பாக அரபு லீக் அமைதி குழுவினர் அதிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை. இந்நிலையில் ஐ.நா . பாதுகாப்புக்கவுன்சிலில் இடம் பெற்று ஐந்து [...]
-
எங்களைத் தாக்க ஈரான் அணுகுண்டுகளை தயாரித்துள்ளது
தங்கள் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை தாக்குவதற்காக அணுகுண்டுகளை ஈரான் தயாரித்துள்ளது என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. ஏற்கனவே ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக கூறி அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்க நிலையில் இஸ்ரேல் இந்தக் குற்றச்சாட்டை கூறியுள்ளது. இஸ்ரேலில் நடைபெற்றுவரும் சர்வதேச பாதுகாப்பு உச்சி மாநாடு நடைபெற்றபோது இஸ்ரேல் ராணுவ உளவு அமைப்பின் தலைவர் ஜெனரல் அவிவ்கோச்சாவி இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்
-
விஜய் நடிக்கும் ‘துப்பாக்கி’ திடீர் நிறுத்தம்
நடிகர் விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தை திடீரென நிறுத்துவதாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அறிவித்துள்ளது விஜய் ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது. திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் திரைப்படத் தொழிலாளர் சம்மேளமான பெப்சிக்கும் இடையேயான மோதலால் தமிழ் திரைப்பட உலகம் முடங்கியுள்ளது. இந்நிலையில் கலைப்புலி தாணு தயாரிப்பில் மும்பையில் விஜய்யை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் “துப்பாக்கி” என்ற படத்தை இயக்கி வந்தார். பெப்சி- தயாரிப்பாளர்கள் சங்க மோதல் நீடித்து வரும் நிலையில் திடீரென முருகதாஸ் அறிவித்திருப்பது விஜய் மற்றும் [...]
-
பிரபல நீச்சல் வீரர் ஹீரோவாக நடிக்கும் ‘சேவற்கொடி’!
நீச்சலில் பல சாதனைகள் புரிந்தவர் அருண் பாலாஜி. கடந்த 1995 ஆம் ஆண்டு தனது 8 வயதில் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை கடலில் 10.41 மணி நேரத்தில் 32 கி.மீ.நீந்தி ‘உலக சாதனை’ செய்தவர். இதில் ஏற்கனவே சாதனை புரிந்த குற்றாலீஸ்வரனின் நீச்சல் சாதனையை வென்றவர். இனி இவர் சேவற்கொடி அருண பாலாஜி ஆகிவிடுவார்! கதாநாயகியாக பாமா நடிக்கிறார்.இயக்குனர் லோகிததாசின் அறிமுகமான இவர் மலையாளத்தில் பத்துக்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களில் நடித்தவர்.’மைனா’ கன்னட ரீமேக்கான ‘ஷைலு’படத்திலும் நடித்திருக்கிறார். [...]
-
மணிரத்னத்தின் அடுத்த படம் கடல்
தனது அடுத்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். இந்த அறிவிப்பை இன்று அவரே முறைப்படி வெளியிட்டார். ராவணன் படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் அடுத்த படம் குறித்து பல்வேறு செய்திகள். பூக்கடை என இந்தப் படத்துக்கு பெயரிடப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அதை மணிரத்னம் மறுத்துவிட்டார். இந்த நிலையில் இன்று புதிய அறிவிப்பு வெளியிட்டார். படத்துக்குப் பெயர் கடல் என்றும், கார்த்திக் மகன் கவுதம்தான் ஹீரோ என்றும் அவர் கூறியுள்ளார். சமந்தா நாயகியாக நடிக்கிறார். அர்ஜூனும், மோகன் [...]
-
ராஜபக்சேவுக்கு என்னாச்சு?… சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக விரைகிறார்!
ராஜபக்சே சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்கிறார் என்றும், தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அந்நாட்டு இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெறவிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை அவரது ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்தனா செய்து வருகிறார். ராஜபக்சேவுடன் செல்பவர்களுக்கு தங்குமிட வசதிகளை இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸு்ககு நெருக்கமான வர்த்தகர் ஒருவர் செய்து கொடுக்கிறாராம். முதலில் ராஜபக்சே அமெரிக்காவில் தான் சிகிச்சை பெறுவதாக இருந்தது. ஆனால் போர்க்குற்றம் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளதால் [...]
|
|
|